உள்ளூர் செய்திகள்

சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி

Published On 2022-09-03 09:43 GMT   |   Update On 2022-09-03 09:43 GMT
  • உரிமையாளருக்கு அபராதம்
  • மாடுகளை கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்

வந்தவாசி:

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட சன்னதி தெரு அச்சரப்பாக்கம் சாலை பஜார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் அதிகமாக மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த சாலைகளில் அதிகமாக மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் முதியோர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

இது சம்பந்தமாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகளை மாடுகள் முட்டி கீழே தள்ளியது. இது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதனை சமூக வலைதளங்கள் மூலம் பரவியதால் வீடியோ வைரலானது.

இது சம்பந்தமாக நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் உத்தரவின் படி நகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடிக்க உத்தரவிட்டார். பின்னர் மாடுகளை கோசாலைக்கு அனுப்பி வைத்து மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News