உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசிய போது எடுத்த படம்.

ஊராட்சி பணிகளை முனைப்புடன் செய்து திறம்பட நிறைவேற்ற வேண்டும்

Published On 2023-01-13 08:29 GMT   |   Update On 2023-01-13 08:29 GMT
  • கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
  • ரூ.10 லட்சம் மற்றும் விருதுகள் அறிவிப்பு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கிராம ஊராட்சி திட்டங்கள் மற்றும் நிர்வாகம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள் குறித்து அவர் விளக்கமாக பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்:-

கிராம ஊராட்சிகளுக்கு ஊராட்சி மன்றத் தலை வர்கள் கட்டுப்பாட்டில் தான் பணிகள் ஒதுக்கப்படுகிறது. எனவே ஊராட்சி பணிகளை முனைப்புடன் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திறம்பட செய்து நிறைவேற்ற வேண்டும்.

நீடித்த மற்றும் நிலையான பல்வேறு வளர்ச்சி இலக்குகளை எட்டிவிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது ரூ.10 லட்சம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது.

இதனை மாவட்ட மற்றும் மாநில அளவிலான தோ்வு குழுக்கள் பரிசீலனை செய்து அரசுக்கு முன்மொழிவு செய்யும்'' என்றார்.

பங்கேற்பு கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News