உள்ளூர் செய்திகள்

சேத்துப்பட்டு அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தில் ஊர் காத்த காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் 11 வகை வரிசை தட்டுடன் கோவிலை சுற்றி வந்த போது எடுத்த படம்

சேத்துப்பட்டில் ஊர்காத்த காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Update: 2022-08-15 08:58 GMT
  • மேளதாளம் முழங்க புனிதநீர் கொண்டுவரப்பட்டது
  • திரளான பக்தர்கள் தரிசனம்

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் அனாதிமங்கலம், கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் ஊர் காத்த காளியம்மன், கோவில் புதியதாக கட்டி, கோவில் முன்பு மண்டபம் கட்டப்பட்டு பஞ்சவர்ணம் பூசி, இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

கோவில் முன்பு யாகசாலை அமைத்து 108, கலசம் வைத்து. கோ பூஜை, தம்பதி பூஜை, விநாயகர் பூஜை, நாடி சந்தனம், உள்ளிட்ட மூன்று கால யாக பூஜைகள் செய்யப்பட்டு.

பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை மேளதாளம் முழங்க 11 வகை வரிசை தட்டுடன் கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள்.

பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் காத்த காளியம்மன் வகையறா காரர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், செய்திருந்தனர்.

Tags:    

Similar News