உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்ட போது எடுத்த படம்

திருவண்ணாமலையில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

Update: 2022-08-15 09:17 GMT
  • கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
  • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை:

75-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலெக்டர் பி.முருகேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சமாதான புறாக்கள் வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டார்.

இதைத்தொடர்ந்து உழவர் பாதுகாப்பு திட்டம் விபத்து நிவாரணத் தொகை  ப்பட்டா, பயிர் விளைச்சலில் முதல் பரிசு திரவ உயிர் உறவும் விசைத்தெளிப்பான் உட்பட 781 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 31 லட்சத்து 94,654 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News