உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை, சேத்துப்பட்டில் பலத்த மழை
- சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி நின்றது
- அனல் தணிந்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியது
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, தேவிகாபுரம், நெடுங்குணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 20 நிமிடம் மழை பெய்ததால் சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
சேத்துப்பட்டு வந்தவாசி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்லும்போது அங்குள்ள கடைக்குள் மழைநீர் சென்றது. இதனால் கடை நடத்துபவர் கள் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசுகிறது. அதன்படி நேற்று பகலிலும் வெயில் கொளுத்தியது. மதியம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் மாலை சுமார் 4 மணியளவில் அரை மணி நேரத் திற்கு மேல் மிதமான மழை பெய்தது. இதனால் அனல் காற்று குறைந்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியது.