உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்

செங்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

Update: 2022-08-15 09:11 GMT
  • துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது
  • திரளமான பக்தர்கள் பங்கேற்பு

செங்கம்:

செங்கம் நகரில் போளூர் சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு நேற்று துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. கோவிலின் வளாகத்தில் நேற்று துரியோதனன் வடிவில் பிரம்மாண்டமான மண் சிற்பம் அமைக்கப்பட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை கோவிலின் வளாகத்தில் அக்னி வசந்த தீமிதி திருவிழா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக திருக்கோவிலில் உள்ள மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News