கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணியை சேவூர்ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
கொளத்தூர் கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி
- ரூ.93 லட்சம் நிதி ஒதுக்கீடு
- ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலுக்கு மூன்று நிலை ராஜகோபுரம் கட்ட ரூ.93 லட்சம் அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்.
தற்போது ராஜகோபுரம் கட்டும் பணி கோவிலில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் ஒன்றிய செயலாளர்கள் திருமால், இ.ஜெயப்பிரகாஷ், ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், கண்ணமங்கலம் நகர செயலாளர் பாண்டியன், கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணிஆனந்தன், துணை தலைவர் சாலம்மாள், வழக்கறிஞர் வெங்கடேசன், அசோக்குமார், வேலப்பாடி சரவணன், வினோத் உள்பட பலர் உடன் வந்திருந்தனர். மேலும் கோயில் விழாக்குழு தலைவர் சரவணன், முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.