உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

Published On 2022-12-25 14:05 IST   |   Update On 2022-12-25 14:05:00 IST
  • நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பாலகன் பிறக்கும் நிகழ்ச்சி நடந்தது
  • நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகம் அருகில் அமைந்துள்ள உலக மாதா ஆலயத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பாலகன் பிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதேப்போல் பெரியார் சிலை அருகில் அமைந்துள்ள ஆற்காடு லுத்தரன் திருச்சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.

வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் உள்ள தூய இருதய ஆலயத்தில் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பல்வேறு கிறிஸ்துவ பாடல்களை பாடிக்கொண்டு திருப்பலியில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் இயேசுநாதர் கிறிஸ்து பிறந்த குழந்தை இயேசுவை கிறிஸ்துவ குடிலில் வைக்கப்பட்டது.

கூட்டு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News