செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ் உழவர் பேரியக்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம்
- 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது.
- 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழர் உழவர் பேரியக்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆலையைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளுக்குச் சேர வேண்டிய சுமார் ரூ 32. கோடியை கடந்த 7 மாதங்களாக சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்கப்படாமல் விவசாயிகளை அலை கழிப்பதைக் கண்டித்தும், 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகைப் போராட்டம் தமிழ் உழவர் பேரியக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரியக்க மாநில நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கணேஷ்குமர், வேலுச்சாமி ஆகியோர் தலைமைத் தாங்கினார்.
வன்னியர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முக்கூர் ராமஜெயம், தி.க காத்தவராயன், மாவட்ட தலைவர் சீனுவாசன், பேரியக்க மாவட்ட செயலாளர் மாம்பட்டு ரமேஷ், சு.மண்ணப்பன், பா. மச்சேந்திரன், கி. ஜெய்சங்கர், வாக்கடை புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழுக்கமிட்டனர்.
இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 500க்கும் மேற்ட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
ஆலை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த தமிழ் நாடு உழவர் பேரியகத்தைச் சேர்ந்த மாவட்ட அமைப்பு தன் தலைவர் சக்திவேல், வெள்ளக்குளம் ஏழுமலை 7 பேர் அடங்கிய குழுவினர் ஆலையின் நிர்வாக மேலாளர் காமாட்சி முன்னிலையில் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது நிர்வாக மேலாளர் ஆலைத் தரப்பில் அனைத்துப் பணப்பலன்கள் கிடைக்க ஏற்பாடு செய்யபட்டு உள்ளது. அரசு தரப்பில் இருந்து இன்னும் 15 தினங்களுக்குள் கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் கிடைக்கும் என்று உறுதியளித்தன் பேரில், உழவர் பேரியக்கத்தினர்.
முற்றுகைப் பேராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் சுமார் 5 மணி நேரம் பரபரப்பாகக் காணபட்டது.