உள்ளூர் செய்திகள்

வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் கடைகள் கட்ட பூமி பூஜை

Published On 2022-08-30 15:00 IST   |   Update On 2022-08-30 15:00:00 IST
  • காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
  • ஜோதி எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் உள்ளது.

இந்த கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் வளாகத்தில் 6 வணிக கடைகள் கட்டுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி பூமி பூஜை செய்தனர். பூஜையில் ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நகர மன்ற தலைவர் மோகனவேல், ஒன்றிய குழு தலைவர்கள் பாபு, ராஜி, திலகவதி, ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், ஞானவேல், நகராட்சி ஆணையாளர் ரகுராமன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், கங்காதரன், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, ஆய்வாளர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News