உள்ளூர் செய்திகள்
புதிய நூலக கட்டிட பணிக்கு பூமி பூஜை
- ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் தொடக்கம்
- ஏராளமானோர் பங்கேற்பு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி அலுவலகம் அருகில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் புதிய அறிவுசார் நூலக கட்டிட பணி பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்சிக்கு ஆணையர் தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்றார்.
சேர்மன் ஏ.சி.மணி தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் புதிய நூலக கட்டிடத்திற்கு பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மோகன், அன்பழகன், துரைமாமது, நகர பொருளாளர் கவுன்சிலர் பழனி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் தயாநிதி, எதிரொலி மணியன், பிடிசி உதயசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இறுதியியில் பொறியாளர் விஜயகாமராஜ் நன்றி கூறினார்.