உள்ளூர் செய்திகள்

பைக்கில் ஏறிய பாம்பு

Published On 2023-02-28 15:19 IST   |   Update On 2023-02-28 15:19:00 IST
  • ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்
  • வனப்பகுதிக்கு கொண்டுசென்று விட்டனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கட்ட பொம்மன் தெருவில் உள்ள ஒரு கடைக்கு நேற்று மாலை மொபட்டில் ஒருவர் வந்தார். அப்போது மொபட்டின் கால் வைக்கும் பகுதியில் சிறிய பாம்பு ஒன்று இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாம்பை வெளியேற்ற முயற்சி செய்தார்.

அந்தப் பகுதி எப்பொழுதும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் மொபட்டில் பாம்பு ஏறிய சம்பவம் அறிந்தபொதுமக்கள் பலர் அங்கு திரண்டனர். பின் னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அதன்பேரில் தீயணைப் புத்துறையினர் விரைந்து வந்து மொபட்டில் இருந்து பாம்பை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வாகனத்தில் இருந்த பாம்பு அதிலிருந்து கீழே இறங்கியது. பின்னர் அதனை தீயணைப்புத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News