உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம் புதிய சாலை பஸ் நிறுத்தம்.

புதிய சாலையில் நிழற் கூடம் கட்ட வேண்டும்

Published On 2022-09-07 09:14 GMT   |   Update On 2022-09-07 09:14 GMT
  • பயணிகள் வலியுறுத்தல்
  • ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது பழைய நிழற்கூடம் இடிக்கப்பட்டது

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் காட்டுக்காநல்லூர் ரோடு தெரு சந்திப்பில் சிறிய நிழற்கூடம் இருந்தது. வேலூர் மார்க்கம் செல்லும் பஸ்கள் நின்று செல்லும். இதனால் இங்கு பஸ்சிற்க்கு பயணிகள் அதிகமாக காத்திருக்கும் நிலை உள்ளது.

இதேபோல் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் நின்று செல்ல கண்ணமங்கலம் புதிய சாலை ஏரிக்கால்வாய் செல்லும் கல்வெட்டு அருகே கட்டவேண்டும்.

இந்த இரு இடங்களில் பயணிகள் வசதிக்காக சிறிய நிழற்கூடம் இருந்த நிலையில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து விட்டனர். அதன் பின்னர் நிழற்கூடம் அமைக்க வில்லை.

தொடர்ந்து திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் ஆரணி சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பில் புதிய நிழற்கூடம் கட்டப்பட்டு பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் 2 இடங்களிலும் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும் என பயணிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் 2 இடங்களிலும் பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News