உள்ளூர் செய்திகள்

காளைவிடும் விழா குழுவினர் 70 பேர் மீது வழக்கு

Published On 2023-05-12 12:21 IST   |   Update On 2023-05-12 12:21:00 IST
  • அனுமதியின்றி நடத்தினால் கடும் நடவடிக்கை
  • 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டத்தில் காளைவிடும் திருவிழாவிற்கு மாவட்ட அளவில் அனுமதி மறுக்கபட்டுள்ளன.

இதனால் மாவட்ட அளவில் நடைபெறும் இடங்களில் போலீசார் அனுமதி மறுக்கபட்டு தடை செய்யபட்டுள்ளனர்.

மேலும் படவேடு மற்றும் படவேடு வீரக்கோவில் கேசவபுரம் மங்களாபுரம், கண்ணமங்கலம், ஊராட்சிக்குபட்ட புதுப்பேட்டை காட்டுகா நல்லூர் கொளத்துர் பெரிய அய்யம்பாளையம், கீழ்நகர், உள்ளிட்ட கிராமங்களில் சித்திரை விழாவை முன்னிட்டு அனுமதியின்றி காளைவிடும் திருவிழா நடைபெற்றது.

இதனால் விழா குழுவினர் மீது கண்ணம ங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் இதுவரையில் 70-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அனுமதியின்றி நடைபெற்ற காளைவிடும் விழாவில் பங்கேற்ற 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் திருவண்ணா மலை மாவட்ட அளவில் காளைவிடும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள தால் விழாவை நடத்த கூடாது என்று கண்ணமங்கலம் போலீசார் காளைவிடும் விழா குழுவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News