உள்ளூர் செய்திகள்

கமண்டல நதியில் தீர்த்தவாரி நடந்தது

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் தீர்த்தவாரி

Published On 2022-08-28 14:22 IST   |   Update On 2022-08-28 14:22:00 IST
  • அம்மன் கமண்டல நதியில் எழுந்தருளினார்
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆறாம் வெள்ளி விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் கியூ வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

பொதுவாக ஆறாம் வெள்ளியன்று ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் அமாவாசை என்பதால் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது என உள்ளூர் பக்தர் ஒருவர் தெரிவித்தார். மாலையில் நாதஸ்வர கச்சேரியும் நடைபெற்றது. இரவில் உற்சவ அம்மனுக்கு கமண்டல நதியில் தீர்த்தவாரி செய்து, ராஜராஜேஸ்வரி அலங்காரம் முத்து ரதத்தில் உற்சவம் நடைபெற்றது.

மேலும் ராகமாலிகா குழுவினர் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அவருடன் போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் எம் எல் ஏ ராஜேந்திரன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.வி.சேகர், ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், முன்னாள் கவுன்சிலர் தங்கமணி உள்பட பலர் வந்திருந்தனர்.

அம்மன் உற்சவம் மாடவீதி உலாவில் கரகாட்டம், நையாண்டி மேளம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமல மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News