உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் கவுன்சிலர்கள் வெளிநடப்பு  செய்த காட்சி.

அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Published On 2022-08-23 16:01 IST   |   Update On 2022-08-23 16:01:00 IST
  • வந்தவாசி ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு
  • டெண்டர்கள் விடப்படாமல் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நிர்வாகத்தை கண்டித்து ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதாந்திர ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. பா.ம.க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஒன்றிய குழு கூட்டத்திற்கு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் கூட்டத்தை உரிய நேரத்தில் தொடங்கவில்லை என வலியுறுத்தியும் தாழ்த்தப்பட்ட மக்கள் இடத்தில் டெண்டர்களை விடப்படாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் ஒன்றிய குழு துணை தலைவர் விஜயன்,சக்திவேல், சுகந்தி தணிகைவேல், தனசேகர் தேவி துரைராஜ் ஆகிய 5 ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News