உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திருப்பூரில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது - 7 வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-07-02 10:59 GMT   |   Update On 2023-07-02 10:59 GMT
  • மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர் குற்றச்சாட்டு வந்நதது.
  • திருப்பூரில் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தை மட்டும் தொடர்ந்து திருடி வந்தது தெரிய வந்தது .

திருப்பூர்:

திருப்பூர் மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் உத்தரவின் பேரில் கொங்கு நகர் பகுதியில் உதவி ஆணையர் அனில் குமார் தலைமையில் வடக்கு காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விக்கி என்கிற விக்னேஸ்வரன் என்பதும் இவர் திருப்பூர் ஊத்துக்குளி சாலை எஸ் .பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தொடர்ந்து திருப்பூரில் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தை மட்டும் தொடர்ந்து திருடி வந்தது தெரிய வந்தது .

அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடமிருந்து 7 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர் .மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் இன்னும் பல இருசக்கர வாகனங்கள் கிடைக்கும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடிய விக்கி என்கின்ற விக்னேஸ்வரனை வடக்கு காவல் துறையினர் கைது செய்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News