உள்ளூர் செய்திகள்

 தாறுமாறாக நிறுத்தப்பட்ட வாகனங்களை படத்தில் காணலாம். 

உடுமலை உழவர் சந்தையில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-09-06 08:03 GMT   |   Update On 2022-09-06 08:03 GMT
  • காய்கறிகள் வாங்குவதற்காக தினம்தோறும் உழவர் சந்தைக்கு வந்து செல்கின்றனர்.
  • வாகனங்கள் ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.

உடுமலை :

உடுமலை உழவர் சந்தையில் உடுமலை மற்றும் கிராம பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உடுமலை மட்டுமன்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் காய்கறிகள் வாங்குவதற்காக தினம்தோறும் உழவர் சந்தைக்கு வந்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பொது மக்கள் வரும் வாகனங்கள் ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. மேலும் வடக்கு பகுதியில் செல்லும் ரோட்டில் ரோட்டை அடைத்து இரண்டு புறமும் தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்படுவதால் வாகனங்கள் அந்த வழியாக உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்ததை சரி செய்ய போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை வெங்கடகிருஷ்ணா ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு உடுமலை வெங்கட கிருஷ்ணா ரோட்டில் வாகனங்களை ரோட்டிலும் ஓரங்களிலும் தாறுமாறாக நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது இதனால் இந்த வழியாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு வாகனங்கள் இடையூறாக இருக்கிறது. மேலும் இந்த வழியாகத்தான் சந்தைக்கு செல்ல வேண்டும். பெரும்பாலானோர் இந்த வழியைத் தான் பயன்படுத்துகின்றனர். மேலும் சந்தை நாட்களில் இந்த ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்வதால் ரோட்டை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே போக்குவரத்து இடையூறு ஏற்படும் நேரங்களில் காவலர்களை நிறுத்தி போக்குவரத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News