உள்ளூர் செய்திகள்

தக்காளி

சந்தைகளுக்கு வரத்து குறைவால் தக்காளி விலை கிடுகிடு உயர்வு - கிலோ ரூ.42 க்கு விற்பனை

Published On 2023-06-21 12:44 IST   |   Update On 2023-06-21 12:44:00 IST
  • வழக்கமாக 80 முதல் 120 டன் வரும்.தற்போது 70 முதல் 100 டன் மட்டுமே வருகிறது.
  • சில்லறை விலையில் கடைகளில் ரூ. 38 முதல் 42 வரை விலை உயர்த்தி விற்கப்படுகிறது.

திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகிறது.ஆனால்திருப்பூருக்கான தக்காளி வரத்து தொடர்ந்து, மூன்று வாரங்களாக குறைந்து வருவதால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வழக்கமாக 80 முதல் 120 டன் வரும்.தற்போது 70 முதல் 100 டன் மட்டுமே வருகிறது.

பொங்கலூர், கொடுவாய், பல்லடம், உகாயனூர், கண்டியன் கோவில் உள்ளிட்ட உள்ளூர் வரத்து குறைந்து விட்டதால், வெளிமாநில தக்காளியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தென்னம்பாளையம் மார்க்கெட்டில் 14 கிலோ எடை கொண்ட சிறிய 'டிப்பர்' 400 முதல் 450 ரூபாய்க்கும், 28 கிலோ எடை கொண்ட பெரிய 'டிப்பர்' 950 முதல் 1,050 ரூபாய்க்கு விற்றது.மொத்த விலையில் தக்காளி ரூ. 32 முதல் 34 வரை விற்கப்படுவதால், சில்லறை விலையில் கடைகளில் ரூ. 38 முதல் 42 வரை விலை உயர்த்தி விற்கப்படுகிறது.

Tags:    

Similar News