உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உரிய ஆவணங்களுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் - திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவுறுத்தல்

Published On 2023-04-29 12:05 GMT   |   Update On 2023-04-29 12:05 GMT
  • ரூ.1 கோடி திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.
  • ரூ.30 லட்சத்தை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

திருப்பூர் :

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு பையர் மூலமாக பனியன் ஆர்டர் வழங்கப்பட்டு, திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தினர் ஆடைகளை தயாரித்து அனுப்பி வைத்தனர். இதற்கான தொகையாக ரூ.1 கோடி திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் பணத்தை முழுவதும் வழங்க வேண்டும். ஆனால் பிப்ரவரி மாதம் வரை வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர் முறையிட்டார். ஏற்றுமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டு நெதர்லாந்தில் உள்ள நிறுவனத்திடம் இருந்து ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொடுத்தது. மீதம் உள்ள ரூ.30 லட்சத்தை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஏற்றுமதியாளர்கள் சட்டவிதிமுறைக்கு உட்பட்டு உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்தால், ஆவணங்களின் அடிப்படையில் இதுபோல் பணத்தை பெறுவது எளிது. எனவே முறைப்படி உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News