உள்ளூர் செய்திகள்
இல.பத்மநாபன்.
- மதியம் 12 மணிக்கு திருப்பூரில் உள்ள மாவட்ட அலுவலகமாக கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடக்கிறது.
- மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.
திருப்பூர் :
தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு திருப்பூரில் உள்ள மாவட்ட அலுவலகமாக கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.