உள்ளூர் செய்திகள்
தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் ராகவ் பெருமாள் மற்றும் லலித் குமார் ஆகியோரை படத்தில் காணலாம்,
கராத்தே போட்டியில் திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை
- கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
திருப்பூர் :
சென்னை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை மான்போர்டு ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் கேரளா , கர்நாடகா,தெலுங்கானா , மகாராஷ்டிரா,பாண்டிச்சேரி , அசாம் போன்ற பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திருப்பூர் பாண்டியன் நகர் அரசு பள்ளி மாணவர்கள் ராகவ் பெருமாள் மற்றும் லலித் குமார் இருவரும் தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இதையடுத்து அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யர் மற்றும் கராத்தே பயிற்சியாளர் நாட்ராயன் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் பாராட்டினர்.