கோப்புபடம்
வங்கி மேலாளருக்கு மிரட்டல் - பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு
- மணிக்கு கடன் வாங்குவதற்காக, வெள்ளக்கோவில் இந்தியன் வங்கி கிளைக்கு குணசேகரன் சென்றுள்ளார்.
- நான் இருக்கும் போது எதற்கு ஆவணங்கள் கேட்கின்றாய் என்று கேட்டு தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது
வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், இவர் வெள்ளகோவிலில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.வெள்ளகோவிலைச் சேர்ந்த மணி என்பவர் இவருடைய நண்பர் . மணிக்கு கடன் வாங்குவதற்காக, வெள்ளக்கோவில் இந்தியன் வங்கி கிளைக்கு குணசேகரன் சென்றுள்ளார்.
அங்கு மேனேஜர் மாசானி தினேஷ் என்பவரிடம் கார் லோன் வேண்டும் என்று கேட்டதாகவும்,அதற்கு வங்கி மேனேஜர் தேவையான ஆவணங்கள் வேண்டும் என கேட்டதாகவும், அதற்கு குணசேகரன் நான் இருக்கும் போது எதற்கு ஆவணங்கள் கேட்கின்றாய் என்று கேட்டு தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக வங்கி மேனேஜர் மாசானி தினேஷ், செல்போனில் குணசேகரன் பேசிய ஆதாரத்துடன் கொடுத்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியர் குணசேகரன் மீது வெள்ளகோவில் போலீசார் தகாத வார்த்தையால் திட்டுவது, அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது, கொலை மிரட்டல் விடுவது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.