உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை படத்தில் காணலாம்.

திருப்பூரில் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் பணம் கேட்டு தகராறு செய்த வாலிபர்கள்

Published On 2023-07-20 12:41 IST   |   Update On 2023-07-20 12:41:00 IST
  • கடைக்கு சென்ற, போதை ஆசாமிகள் இருவர் தகராறில் ஈடுபட்டனர்.
  • பட்டப்பகலில், ரவுடித்தனம் செய்த போதை ஆசாமிகள் குறித்து மங்கலம் போலீசில் புகார் அளித்தனர்

திருப்பூர்:

திருப்பூர், இடுவாய், பாரதிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 17ம் தேதி இவரது கடைக்கு சென்ற, போதை ஆசாமிகள் இருவர் தகராறில் ஈடுபட்டனர். கடையில் மாமூல் பணம் தர வேண்டும் என்று கூறி அடாவடி செய்தனர்.

பணம் தர மறுத்த பெண்ணை தகாத வார்த்தையில் பேசி, கடையில் இருந்த பாட்டில்களை உடைத்தனர். கற்களை கடை மீது வீசினர். தடுக்க வந்த பெண்ணை கீழே தள்ளி விட்டனர். பட்டப்பகலில், ரவுடித்தனம் செய்த போதை ஆசாமிகள் குறித்து மங்கலம் போலீசில் புகார் அளித்தனர். மங்களம் போலீசார் வழக்கு பதிவு செய்து

இதுதொடர்பாக, சூர்யா, (22), சூர்யபிரகாஷ், (23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர் மீது, அடிதடி, வழிப்பறி என ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News