உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
மது குடிக்க பணம் கேட்டு தாக்குதல் நடத்தியவர் கைது
- வெள்ளகோவில் போலீசார் கார்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மது குடிக்க பணம் கேட்டபோது கண்ணன் என்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில், உப்புபாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் கண்ணன் (வயது 41) .தோட்டத்து தொழிலாளியான இவர், சம்பவத்தன்று காலை திருச்சி- கோவை மெயின் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் அருகில் இருந்தபோது, அப்போது அங்கு வந்த சிவநாதபுரத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் கார்த்தி (54) என்பவர் கண்ணனிடம் மது குடிக்க பணம் கேட்டதாகவும், அப்போது கண்ணன் என்னிடம் பணம் இல்லை எனக் கூறியதாகவும், இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த கண்ணன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் கார்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.