உள்ளூர் செய்திகள்

தீ விபத்தில் சேதமான பொருட்கள். 

உடுமலை ஸ்டூடியோவில் பயங்கர தீ விபத்து - ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

Published On 2023-03-04 13:33 IST   |   Update On 2023-03-04 13:33:00 IST
  • உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
  • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

உடுமலை :

உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உடுமலை அண்ணா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வர்கீஸ் என்பவர் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் இவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .இருப்பினும் கடையில் இருந்த கேமராக்கள், பிரிண்டர் மற்றும் மின்சாதன பொருட்கள் உட்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

தீ விபத்து குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பஸ் நிலையம் அருகில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News