உள்ளூர் செய்திகள்

பரிசு பெற்ற மாணவர்கள்.

தடகள போட்டியில் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-11-25 10:16 GMT   |   Update On 2022-11-25 10:16 GMT
  • விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
  • குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டிகளில் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் 2 வது இடமும், கோ-கோ மாணவிகள் பிரிவில் 2 வது இடமும் பெற்றுள்ளனர்.

திருப்பூர் :

பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தடகளப் போட்டிகள் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அதில் திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதில் குண்டு எறிதல் போட்டியில் ஆர்யுஸ்‌ ரோகித் என்ற மாணவர் தங்க பதக்கம் பெற்றார்.

யுவன் பாரத் என்ற மாணவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றார். அபிகிருஷ்ணன் உயரம் தாண்டுதலில் தங்கம் பதக்கம் பெற்றார். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புவனேஸ் என்ற மாணவன் தங்க பதக்கமும், 200 மீட்டரில் வெள்ளி பதக்கமும் பெற்றார். சஞ்சய் மும்முறைத்தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் 400 மீட்டரில் காயத்ரி வெள்ளிப் பதக்கமும் வெண்கல பதக்கமும் வென்றார்.

குழு விளையாட்டுகளில் கால்பந்து போட்டிகளில் மாணவிகள் பிரிவில் மாவட்ட அளவில் 2 வது இடமும், கோ-கோ மாணவிகள் பிரிவில் 2 வது இடமும் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் தேர்வாகியுள்ள மாணவர்களை பள்ளி நிர்வாகிகள், தாளாளர் சாமிநாதன் , மூத்த முதல்வர் மணிகண்டன், முதல்வர் சின்னையா, துணை முதல்வர் ரவி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News