உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

Published On 2022-08-22 08:13 GMT   |   Update On 2022-08-22 08:13 GMT
  • ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 25ந்தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மீதமுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 25ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதில் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். 14 வயது முதல் 40 வயது வரையில் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை.

அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதுடன் அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. ஆகவே மாணவா்கள் இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 25ந்தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0421-2230500 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News