உள்ளூர் செய்திகள்
- 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் சந்தைப்பேட்டை கோட்டை விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப்பெருமானுக்கு, சந்தனம், பால், தயிர், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.