உள்ளூர் செய்திகள்

உற்சவமூர்த்தி கருட சேவை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக கோயிலுக்கு வந்தனர்.

ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு - முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி

Published On 2022-10-08 13:48 IST   |   Update On 2022-10-08 13:48:00 IST
  • புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி இன்று காலை 5 மணிக்கு கோசேவை தரிசனம் நடைபெற்றது.
  • உலகத்தில் உள்ள அனைவருக்கும் மன நிம்மதி மற்றும் உடல் ஆரோக்கியம் பெறுவதற்காக முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

திருப்பூர் :

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி இன்று காலை 5 மணிக்கு கோ சேவை தரிசனம் நடைபெற்றது. அதையடுத்து கால சாந்தி பூஜை, உதய கருட சேவா மற்றும் அன்னதான சேவா ஆகிய பூஜைகள் நடைபெற்றது.

உலகத்தில் உள்ள அனைவருக்கும் மன நிம்மதி மற்றும் உடல் ஆரோக்கியம் பெறுவதற்காக இன்று ஸ்ரீ வீரராகவ பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார். மன ஆரோக்கியத்திற்கு சந்திர பகவானை வழிபடுவது ஐதீகம். அதன்படி சந்திர பகவானுக்கு உகந்ததான முத்து மற்றும் வைரத்தைக் கொண்டு பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளுக்கு மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதேசி அன்று இந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளிப்பர். உற்சவமூர்த்தி கருட சேவை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். புரட்டாசி சனிக்கிழமை என்பதால் இன்று பக்தர்கள் திரளாக கோயிலுக்கு வந்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News