உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வேளாண் அலுவலகங்களில் மானியத்துடன் பாரம்பரிய நெல் ரகம் விற்பனை

Published On 2023-10-08 11:22 GMT   |   Update On 2023-10-08 11:22 GMT
  • விவசாயிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்தில் ஒரு கிலோ ரூ.25-க்கு வழங்கப்படுகிறது.
  • ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை அரசு மானியத்தில் விதை நெல் வழங்கப்படும்.

திருப்பூர்

தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், அதன் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள், வேளாண்மைத்துறை மூலமாக வினியோகம் செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, வெள்ளகோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி ரகம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ரகங்களின் விற்பனை விலை ஒரு கிலோ ரூ.50 ஆகும். விவசாயிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்தில் ஒரு கிலோ ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை அரசு மானியத்தில் விதை நெல் வழங்கப்படும். எனவே சம்பா பருவ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களில் பாரம்பரிய நெல் விதைகளை வாங்கிபயன்பெறலாம்.

இந்த தகவலை வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News