உள்ளூர் செய்திகள்
உடுமலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்
- 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 24 ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 19 பணியாளர்கள் என 43 பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
உடுமலை:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலாளர்கள் வழங்குதல்,கணினி உதவியாளர்கள் பணி வரன் முறைப்படுத்துதல்.
ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீட்டு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்துதல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 24 ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 19 பணியாளர்கள் என 43 பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இதனால் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.