மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்த காட்சி.
ரூ.14.89 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை சீரமைப்பு பணி - துணை மேயர், மண்டல தலைவர் தொடங்கி வைத்தனர்
- தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023ன் கீழ் தார்ச்சாலை சீரமைத்தல் பணி தொடக்க விழா நடந்தது.
- நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 57-வது வார்டில் உள்ள விக்னேஷ்வராநகர் மெயின் வீதியில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023ன் கீழ், ரூ.14.89 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை சீரமைத்தல் பணி தொடக்க விழா நடந்தது. இதனை மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான கவிதா நேதாஜி கண்ணன், உதவி கமிஷனர் செல்வநாயகம், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் அன்பு பாலு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், செல்வராஜ், பாஸ்கர், மேனன், குமார், திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.