உள்ளூர் செய்திகள்

சாலையில் சிதறிக் கிடக்கும் குப்பை கழிவுகள்.

சாலையில் கொட்டப்படும் கழிவுகளால் விபத்து அபாயம்

Published On 2023-09-04 12:59 IST   |   Update On 2023-09-04 12:59:00 IST
  • நால் ரோடு செல்லும் சாலையின் வளைவு பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது.
  • குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும்.

ஊத்துக்குளி:

ஊத்துக்குளி ஆர்.எஸ். சாலையில் இருந்து கவுண்டம்பாளையம் நால் ரோடு செல்லும் சாலையின் வளைவு பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. இது சாலையின் நடுப்பகுதியில் வந்து சேருகிறது.

இதனால் விபத்துகள் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News