உள்ளூர் செய்திகள்

சாலை விரிவாக்கப்பணி நடைபெற்ற காட்சி.

பல்லடத்தில் சாலை விரிவாக்கப்பணி ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டுகோள்

Published On 2022-08-08 06:13 GMT   |   Update On 2022-08-08 06:13 GMT
  • கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
  • தேசிய நெடுஞ்சாலை செல்வதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பல்லடம் :

பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 67 ல், தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும். மேலும் நகரின் மையப்பகுதியில் காவல் துறை அலுவலகங்கள், அரசு மருத்துவமனை,வங்கிகள்,வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதியில் இந்த தேசிய நெடுஞ்சாலை செல்வதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது .இந்த நிலையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை, பல்லடம் - காரணம்பேட்டை வரை, சுமார் 10 கி.மீ. தூரம் உள்ள 2 வழிச்சாலையை,4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு,விரிவாக்க பணிகள் கடந்த 1 மாதமாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் பல்லடம் நகரத்தில் அண்ணா நகர்முதல் பனப்பாளையம் வரை விரிவாக்க பணிகள் விரைவில் பணிகள் துவங்க உள்ளதாகவும்,எனவே நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள அறிவுறுத்தபடுவதாக நெடுஞ்சாலை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 67 ல், பல்லடம் - தாராபுரம் பிரிவு முதல் செட்டிபாளையம் பிரிவு வரை உள்ள, 3 கி.மீ. நீள தூரத்துக்கு, 4 வழிச்சாலையாக ரோடு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதியில், கடைகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு செய்தவர்கள், அவர்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்பில் உள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டு அரசுக்கு சொந்தமாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News