உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மலைவாழ் மக்களுக்கான தேனீ வளர்ப்பு திட்டத்தை விரிவுப்படுத்த வலியுறுத்தல்

Published On 2022-07-06 07:35 GMT   |   Update On 2022-07-06 07:35 GMT
  • வன உரிமை சட்டத்தின் கீழ் தற்போது மலைவாழ் மக்களுக்கு விவசாய நிலங்களுக்கான பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
  • தேனீ வளர்ப்பு வாயிலாக மலைவாழ் மக்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

உடுமலை :

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் குறைந்த பரப்பில், விவசாயம் மேற்கொள்கின்றனர்.மேலும்வடுமாங்காய், சீமாறு புல் சேகரித்து சமவெளிப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்தும் வருகின்றனர்.வன உரிமை சட்டத்தின் கீழ் தற்போது அப்பகுதி மக்களுக்கு விவசாய நிலங்களுக்கான பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தங்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் வேளாண் சார்ந்த தொழில் துவங்க அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன் மலைவாழ் கிராமங்களில் சிறு, குறு தொழில்கள் மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாதவனத்தோடு தொடர்புடைய தேனீ வளர்ப்பு வாயிலாக அப்பகுதி மக்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அப்போது கோவை வேளாண் பல்கலைக்கழகம் உதவியுடன், ஆட்டுமலை, பொருப்பாறு, கரட்டுப்பதி கிராமங்களைச்சேர்ந்த 50 பேருக்குதேனீ வளர்ப்பு பயிற்சியும், 30 பேருக்கு, தேனீ வளர்ப்பு பெட்டி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், அனைத்து மலைவாழ் கிராமங்களிலும், தேனீ வளர்ப்பு பயிற்சியும், உபகரணங்களையும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.இதன் வாயிலாக நிரந்தர வருவாய் கிடைப்பதுடன், புதிதாக மேற்கொள்ளும் விவசாய சாகுபடிக்கும் உதவியாக இருக்கும். பாரம்பரியமாக தேன் சேகரிப்பில் அனுபவம் உள்ளதால், இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ளவும் முடியும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News