உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கொப்பரை கொள்முதலுக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை

Update: 2022-09-30 10:47 GMT
  • ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது
  • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று இறுதிநாள் என அரசு அறிவித்துள்ளது

குடிமங்கலம் :

ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இக்கொள்முதலுக்கான, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று இறுதிநாள் என அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில், 'ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதலுக்காக பெறப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தாமதம் ஏற்படுகிறது. இந்த உடுமலை ஒன்றியத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய முடியாமல் நிலுவையில் உள்ளது. எனவே, விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்க, விண்ணப்பங்களை பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News