உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தொழில்கள் பாதிப்பதை தடுக்க சீரான மின்சாரம் வழங்க வேண்டுகோள்

Published On 2022-08-10 08:11 GMT   |   Update On 2022-08-10 08:11 GMT
  • அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக கிராமமக்கள் புகார்.
  • தேங்காய் எண்ணெய் ஆலைகள் அதிகளவில் உள்ளன.

காங்கயம் :

காங்கயத்தை அடுத்துள்ள நால்ரோடு துணை மின்நிலையத்திலிருந்து, நால்ரோடு, மரவபாளையம், கீரனூர், ஆலாம்பாடி, திட்டுப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக கிராமமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- காங்கயம் மற்றும் சுற்றுப்பகுதிகள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இதுதவிர அரிசி ஆலைகள், தவிடு ஆலைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆலைகள் அதிகளவில் உள்ளன. விவசாய பணிகளான தண்ணீர் பாய்ச்சுதல், போர்வெல்களிலிருந்து தண்ணீர் எடுத்தல் ஆகியவை மின்மோட்டார்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரிசி ஆலைகள் உள்ளிட்ட தொழில்களும் மின்மோட்டார்கள் மூலமே நடைபெறுகிறது.

கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் விவசாய பணிகள் மட்டுமல்லாமல் அரிசி ஆலை பணிகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக இரவு நேரம் முழுவதும் மின்தடை ஏற்படுவதால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆலாம்பாடி உள்ளிட்ட கிராம பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டு கிராமமே இருளில் மூழ்கியது.எனவே மின்வாரிய அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி மின் கோளாறுகளை உடனடியாக சரிசெய்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News