உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை

Published On 2022-11-22 06:31 GMT   |   Update On 2022-11-22 06:32 GMT
  • தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
  • திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

திருப்பூர் :

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர் மற்றும் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் தெரிவித்தாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு நேரிடையாக சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, பால் வளத்துறை, கூட்டுறவுதுறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நல வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் பேரூராட்சிகள் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

ஆய்வு கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, சப்- கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News