குண்டும்குழியுமாக உள்ள சாலைகளை படத்தில் காணலாம்.
உடுமலை பஸ் நிலையத்தில் மழையால் சாலைகள் சேதம்
- வெளியூர் மற்றும் கிராம பகுதி பஸ்கள் வந்து செல்கின்றன.
- பஸ் நிலையம் பகுதியில் தரைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் நிலையத்திற்கு வெளியூர் மற்றும் கிராம பகுதி பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையம் பகுதியில் தரைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மழையால் பள்ளங்களில் நீர் தேங்கி சாலையே தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் ஓட்டுனர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கிழக்குப் பகுதியில் செல்லும் பழனி பஸ் செல்லும் பகுதிகளும் தெற்கு பகுதியில் பொள்ளாச்சி செல்லும் பகுதிகளும் மேற்கு பகுதியில் பொள்ளாச்சி மற்றும் கிராம பகுதிகளுக்கு செல்லும் இடங்களிலும் சாலைகள் பெயர்ந்து குண்டும்குழியுமாக உள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் தடுமாறி விழுகின்ற சூழல் உள்ளது.எனவே சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.