உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூா் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில் உள்ள மதுக்கடையை அகற்றாவிட்டால் போராட்டம்

Published On 2023-08-22 15:42 IST   |   Update On 2023-08-22 15:42:00 IST
  • இஎஸ்ஐ., மருத்துவமனைக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
  • மதுக்கடையை அகற்றாவிட்டால் வரும் ஆகஸ்ட் 27 -ந் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

திருப்பூா்:

திருப்பூா் இஎஸ்ஐ., மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து கலால் உதவி ஆணையா் ராம்குமாரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 -வது மண்டலக் குழு செயலாளா் வி.எஸ்.சசிகுமாா் தலைமையில் அக்கட்சியினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

திருப்பூா் கொங்கு பிரதான சாலையில் அமைந்துள்ள இஎஸ்ஐ., மருத்துவமனைக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி தொழிற்சாலைகளும் அதிகம் உள்ளன. மேலும், மதுக்கடையின் அருகில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறும் ஏற்பட்டு வருகிறது.

இது தொடா்பாக மாவட்ட கலெக்டரிடம் கடந்த ஜூலை 24 ந்தேதி மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இஎஸ்ஐ., மருத்துவமனைக்கு அருகில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றாவிட்டால் வரும் ஆகஸ்ட் 27 -ந் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிப்பின்போது, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி ராஜேந்திரன் மற்றம் பொதுமக்கள் உடனிருந்தனா்.

Tags:    

Similar News