உள்ளூர் செய்திகள்

பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரதமர் மோடி எழுதிய பாராட்டு கடிதத்தை சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதாவிடமிருந்து செவிலியர் பெற்றுக் கொண்ட போது எடுத்த படம்.

கொரோனா தடுப்பூசி அதிக அளவில் செலுத்தியதற்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம்

Published On 2022-08-26 11:12 GMT   |   Update On 2022-08-26 11:12 GMT
  • உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா வழங்கிய அளவும், வேகமும் அற்புதமானது.
  • கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தில் உங்கள் பங்களிப்பை பாராட்டுகிறேன்.

பல்லடம் :

பல்லடம் அரசு மருத்துமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 2021-ம்ஆண்டு ஜனவரி மாதம் 26ந்தேதி தொடங்கியது. இது வரை 17ஆயிரத்து 402 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ,தடுப்பூசி சிறப்பு முகாம் இல்லாத நாட்களில் சனிக்கிழமை தோறும் பல்லடம் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி அதிக அளவில் செலுத்தியதற்காக பிரதமர் மோடி அரசு மருத்துவமனைக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் உலகை அச்சுறுத்திய கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பூசியானது மிகவும் குளிரான மலைகள் முதல் வெப்பமான பாலைவனங்கள் வரை, தொலைதூர கிராமங்கள் முதல் அடர்ந்த காடுகள் வரை கோவிட் 19 தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு புதிய இந்தியா சிறந்து விளங்குகிறது என்பதை வெளிக்காட்டுகிறது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா வழங்கிய அளவும், வேகமும் அற்புதமானது. உங்களை போன்றவர்களின் முயற்சியால் இது நடந்தது. இந்த வரலாற்று சந்தர்ப்பத்தில் இந்தியாவின் கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தில் உங்கள் பங்களிப்பை பாராட்டுகிறேன். மேலும் இது போன்ற முக்கியமான உயிர்காக்கும் பணியில் முன்னணியில் இருப்பதற்காக உங்களை பாராட்டுகிறேன். தடுப்பூசி அளவுகள் நமது தேசத்தின் ஜனநாயக, கருணை மற்றும் சேவை சார்ந்த நெறிமுறைகளின் வலிமையைக் காட்டுகிறது. நெருக்கடியின் போது இந்தியாவின் துணிச்சலைப் பற்றிய கதை வருங்கால தலைமுறையினரால் போற்றப்படும். இவ்வாறு அதில் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளார். இதற்காக பிரதமருக்கு பல்லடம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News