உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பள்ளி மாணவர்களுக்கு குறுமைய, குழு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

Update: 2022-08-07 11:05 GMT
  • பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அவசியம்.
  • நுழைவு படிவம் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 6 குறு மைய அளவில் குழு போட்டிகள், தடகள போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, மெட்ரிக், நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டில் திறமையான மாணவர்கள் பங்கேற்கலாம்.மேலும் 14 வயது, 17 வயது, 19 வயது என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது. பிறப்பு சான்றிதழ், ஆதார் எண், 19 வயது எனில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மிக அவசியம்.நுழைவு படிவம் அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மாணவர் ஏதேனும் ஒரு வயது பிரிவில் மட்டுமே பங்கேற்க முடியும்.

11 வயதுக்குட்பட்ட தொடக்க பள்ளி மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.திருப்பூர் தெற்கில் கோவில்வழியில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியில், திருப்பூர் வடக்கில் காந்திநகரில் உள்ள ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவிநாசியில் எம்.எஸ்.வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் கோடங்கிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரத்தில் முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News