உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்

Published On 2023-07-14 15:44 IST   |   Update On 2023-07-14 15:44:00 IST
  • அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை மானியம், இதர விவசாயிகளுக்கு அதிக பட்சமாக ரூ.70 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
  • கிராமங்களுக்கு உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் வழங்கப்படும்.

திருப்பூர்:

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள தாராபுரம், திருப்பூர், உடுமலை உபகோட்ட வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு பவர் டிரில்லர் மானியத்தில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.மானியம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல் ஆதார்கார்டு, வங்கிகணக்கு எண், போட்டோ ஆகியவற்றினை உழவன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய இயலாத விவசாயிகள்அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் உதவியினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மானியத்தொகை போக மீதம் உள்ள தொகைக்கு வங்கி வரைவோலை அல்லது மின்னணு பண பரிமாற்றம் மேற்கொள்ளலாம். சிறு, குறு, மகளிர், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை மானியம், இதர விவசாயிகளுக்கு அதிக பட்சமாக ரூ.70 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் பவர்டிரில்லர் பெறப்பட்ட பின்னர் துறை அலுவலர்களால் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மானியத் தொகை, உரிய நிறுவனங்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் உபகோட்ட அலுவலக உதவிசெயற்பொறியாளர் தி.சந்திரன்- 9442529340, தாராபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் எஸ். சுந்தரராஜன்- 9865028152 ,உடுமலை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன் 9003930773 ஆகியோரின் தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News