உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
- உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
திருப்பூர்:
திருப்பூர் அலகுமலை துணை மின் நிைலய முத்தணம்பாளையம் உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பெருந்தொழுவு, கவுண்டம்பாளையம், நொச்சிபாளையம், அமராவதிபாளையம், ராமேகவுண்டம்பாளையம், கிருஷ்ணா நகர், பிள்ளையார் நகர், அமராவதி நகர், சரணம் அய்யப்பா நகர், ரங்கேகவுண்டம்பாளையம், கோவில் வழி, விவேகானந்தா பள்ளி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.