உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் தேர் வடம் பிடித்த காட்சி.

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2023-04-05 10:04 IST   |   Update On 2023-04-05 10:04:00 IST
  • லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
  • ஒயிலாட்டம் , வள்ளி கும்மியாட்டம் , கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது.

பெருமாநல்லூர் :

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் மற்றும் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு காப்பு கட்டு பூசாரிகள் கை குண்டம் வாரி இறங்குதல், வீரமக்கள் குண்டம் இறங்குதல் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கி வழிபட்டனர்.

காைல 8மணிக்கு குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அபிஷேக ஆராதனை, அம்மன் பூத வாகன காட்சியுடன் புறப்பாடு, மண்டபக்கட்டளை நடந்தது. மதியம் 2மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளல், மண்டப கட்டளை, மிராசுதாரர்களுக்கு மரியாதை செய்தல், தேங்காய் வழங்குதல் நடந்தது. மதியம் 3-30மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 7மணிக்கு அம்மன் கலைக்குழு மற்றும் ஸ்ரீசக்தி பண்பாட்டு மையம் வழங்கும் ஒயிலாட்டம் , வள்ளி கும்மியாட்டம் , 9-30 மணிக்கு கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று 5-ந் தேதி காலை 7-30 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. மாலை 7மணிக்கு அம்மன் புறப்பாடு , மண்டப கட்டளை நடக்கிறது. நாளை 6-ந்தேதி காலை 7-30மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு, மாலை 7மணிக்கு அம்மன் புறப்பாடு நடக்கிறது. 7-ந் தேதி காலை 7-30மணிக்கு அம்மன் புலி வாகன திருவீதி உலா, மாலை 7 மணிக்கு அம்மன் புறப்பாடு நடக்கிறது. 8-ந் தேதி காலை 11 மணிக்கு மகா தரிசனம், அம்மன் புறப்பாடு, கொடிஇறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News