உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வளர்ப்பு பிராணிகளாக மாறி வரும் மயில்கள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை

Published On 2023-05-31 05:14 GMT   |   Update On 2023-05-31 05:14 GMT
  • நாட்டின் தேசியப்பறவையான மயில் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது.
  • மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனம் தற்போது வாழ்விடத்தை இழந்து தவிக்கின்றன.

உடுமலை :

நாட்டின் தேசியப்பறவையான மயில் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மயில், கோழி இனத்தை சேர்ந்த பெரிய பறவையாகும். காடும், காடும் சார்ந்த பகுதிகளில் மயில் வாழ்ந்து வந்தது.இப்பறவை காடுகளில் கிடைக்கும் விட்டில் மற்றும் சிறு பூச்சிகள், பூரான், மண்புழு, சிறிய பாம்புகள் மற்றும் தானியங்களை உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன.

மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனம் தற்போது வாழ்விடத்தை இழந்து தவிக்கின்றன. உணவுக்காக அவை விளை நிலங்களுக்கு படையெடுக்கின்றன. முதலில் மனிதர்கள் நடமாட்டம், வாகனங்கள் சப்தம் கேட்டாலோ ஓடியும், பறந்தும் மறையும் மயில்கள் தற்போது மனிதர்களை கண்டு அச்சப்படவில்லை. விவசாய நிலத்தில் நாட்டு கோழிகளை போன்று மயில்கள் உலா வருகின்றன.

இதனால் வயல்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிவதை காண முடிகிறது. அதுவும் மாலை நேரத்தில் கூட்டமாக வரும் மயில்களுக்கு குடியிருப்பு வாசிகள், சிலர் தானியங்களை உணவாக கொடுக்கின்றனர்.வனப்பகுதியில் மட்டும் காணப்பட்ட மயில் இனங்கள், தற்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் போன்று மாறியுள்ளன. இவை மாலை நேரங்களில் வலம் வருவதை கண்டு மக்கள் ரசிக்கின்றனர்.ஆனால் விவசாய பகுதிகளில் நிலக்கடலை, தானியம், காய்கறி உள்ளிட்ட கீரை சாகுபடியை மயில்கள் மேய்ச்சல் நிலமாக மாற்றி விடுவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.கிராம ரோடுகளில் மயில்கள் பறந்து செல்லும் போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர்.இப்பிரச்னைக்கு, வனத்துறை அதிகாரிகளோடு மாவட்ட நிர்வாகம் பேச்சு நடத்தி மயில்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News