உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பாலக்காடு - திருச்செந்தூர் ரெயில் 12-ந்தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கம்

Update: 2023-06-10 11:09 GMT
  • தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
  • தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

உடுமலை :

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு -திருச்செந்தூர் ரெயில் மற்றும் திருச்செந்தூர்- பாலக்காடு ரெயில் வரும் 12-ந் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் ரெயில் திண்டுக்கல்- திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும். திருச்செந்தூர்- பாலக்காடு ரெயில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு பாலக்காடு வரை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

Similar News