உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

Published On 2022-12-24 13:16 IST   |   Update On 2022-12-24 13:16:00 IST
  • ஆஞ்சநேயர் கோவில்களில் சீதாராமருடன் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது வழக்கம்.
  • அனுமன் ஜெயந்தி விழா நேற்று காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது.

தாராபுரம்:

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற 500 ஆண்டுகள் பழமையான காடு அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் கோவில்களில் சீதாராமருடன் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது வழக்கம்.ஆனால் இங்கு மூலமூா்த்தியாக ஆஞ்சநேயரும், உற்சவ மூா்த்திகளாக சீதாராமரும் காட்சி தருவது தனிச்சிறப்பு ஆகும்.இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு புஷ்ப அலங்காரம், 8 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் மட்டுமல்லாது, சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். 

Tags:    

Similar News