உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

நிப்ட்-டீ நிட்வேர் பேஷன் இன்ஸ்டிடியூட் சார்பில் சணல் பொருட்கள் உற்பத்தி பயிற்சி

Published On 2023-11-13 16:01 IST   |   Update On 2023-11-13 16:01:00 IST
  • தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம், சணல் வாரியம் சார்பில், புதிய தொழில் பயிற்சிகள் விரைவில் துவங்க இருக்கிறது.
  • சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில் 10ம் வகுப்புக்கு மேல்படித்த 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர் பங்கேற்கலாம்.

திருப்பூர்:

திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி மற்றும் மத்திய, மாநில அரசு திட்டங்களில், இலவச பயிற்சி அளிக்கும் மையம், திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இயங்கி வருகிறது. கடந்த, 8 ஆண்டுகளாக, 4,000க்கும் அதிகமான இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.

தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம், சணல் வாரியம் சார்பில், புதிய தொழில் பயிற்சிகள் விரைவில் துவங்க இருக்கிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர், இளம்பெண்கள், இல்லத்தரசிகள், இப்பயிற்சியில் பங்கேற்கலாம். குறிப்பாக சணல் பொருட்கள் தயாரிப்பது குறித்து இலவசமாக பயிற்சி பெறலாம்.

இது குறித்து ' நிப்ட்-டீ நிட்வேர் பேஷன் இன்ஸ்டிடியூட் மைய பொறுப்பாளர்கள் கூறியதாவது:-

இலவச குறுகியகால திறன் பயிற்சியில் தையல் பயிற்சியில், 8-ம் வகுப்புக்கு மேல் பயின்ற 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர் பங்கேற்கலாம். சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில் 10ம் வகுப்புக்கு மேல்படித்த 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர் பங்கேற்கலாம்.

இலவச பயிற்சி பெறுவோருக்கு, வேலை வாய்ப்பும் உறுதி செய்து கொடுக்கப்படும். முதலில், பயிற்சிக்கான சேர்க்கையை முடித்த பிறகே, பயிற்சி துவங்கும் நாள் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 88707 25111 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News